திருமண அழைப்பு கவிதைகள்

                     திருமண அழைப்பு கவிதைகள் - 1

ஓரடி கற்பைக் காக்க,

ஈரடி கணவர் காக்க

சீரடி மூன்றாம் பாதம் சேர்ந்தோர்

குலத்தை காக்க

நாலடி அச்சம், நாணம், மடம், பறிர்ப்பு

எனும் நால்வகைப் பண்புகளைக் காக்க, 

ஐந்தடி புலன்கள் ஐந்தை அடக்கியே

வாழவைக் காக்க

ஆறடி கலைகளாறும் கணவர்கே

அன்பில் ஊட்ட

ஏழடி உலகில் ஏழும்,

அன்புடன் கணவரோடு

இணைந்து வாழ!



நன்னாள் பார்த்து

பந்தர்கால் நட்டு

அத்தைமார் நலுங்கு வைத்து

உறவினர்கள் வாழ்த்துச் சொல்ல

நண்பர்கள் கேலி செய்ய

ஆடை ஆபரணங்கள் 

ஜொலி ஜொலிக்க

கோலமலர்கள் வீட்டை அலங்கரிக்க

தென்னாட்டுச் சமையல் கமகமக்க

மேளதாளங்கள் மங்களம் முழங்க

மணமக்கள் கண்களால் பேச

அதை கண்டு ரசிக்க

எங்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு

வாருங்கள் ! வந்து

மணமக்களை வாழ்த்துங்கள் !!



அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து

அக்கினி சாட்சியாக இல்லற வாசலில்

நல்லறக் கோலமிடப் புறப்படும் எங்களைப் 

பெற்று வளர்த்து பேணிக் காத்த,

அன்பு தெய்வங்களாம் அன்னை தந்தைக்கும்

பாசப்பிணைப்போடு பண்புதனை ஊட்டிய

உடன்பிறப்புக்களுக்கும்

கல்வி கண்களை திறந்த குரு அவர்களுக்கும்

வாழ்வுப் பாதையில் வளமோடு வாழவும்

உற்ற காலத்தில் உள்ளன்போடு உதவிய

உற்றத்தார், நண்பர்களுக்கும்,

உவகையின் விளிம்பில் நின்று

தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.


வாருங்கள்! வரவேற்கிறோம்!!

வாழ்த்துங்கள்! வளர்கிறோம்!!




இல்லறமெனும் நல்லறத்தை

இனிதே ஏற்கும்

இளம் தம்பதிகள் !

நீவிர் இருவரும்

இல்லறம் இன்புற

இன்சொல் இயம்பி

நல்விருந்தோம்பி

வருவிருந்து காத்திருந்து

ஆன்ற சுற்றத்தொடும்

அருமை உறவினர்களொடும்

மலரும் மணமுமாய்

நகமும் சதையுமாய்

வாழையடி வாழையாய்

என்றும் பதினாறு நற்பண்புகளை

பெற்று பல்லாண்டு பல்லாண்டு

பல்லாயிரத்தாண்டு வளமுடன் வாழ்க!

இவ்வையகம் போற்றிட...

என வாழ்த்த

அன்புடன் அழைக்கின்றோம்...




பாசத்தைப் புகட்டும் தாத்தாக்கள் - பாட்டிகள்,

தோள் தூக்கும் தாய் மாமன்கள்,

அன்பை விரும்பும் அத்தைமார்கள்

பாராட்டி வளர்த்த பெரியப்பாக்கள் - பெரியம்மாக்கள், 

சீராட்டும் சித்தப்பாக்கள் - சித்திகள்

அக்கறைகொண்ட அண்ணன்கள் - அண்ணிகள்,

அரவணைக்கும் அக்காக்கள் - மச்சான்கள்

அன்பைத்தரும் தம்பிகள், தங்கைகள்,

உயிர் கொடுக்கும் நண்பர்கள்,

மனதை தொடும் மழலைச் செல்வங்கள்

மற்றும் 

இல்லத்தில் உள்ளோரும்

உள்ளத்தில் உள்ளோரும்




ஆன்றோர் வாழ்த்துரைக்க

ஆயிரமாய் பூச்சொரிய

மங்கை திருமகளாய்

மணவறையில் காத்திருக்க

நாதஸ்வர மேளங்கள்

நல்லதொரு வாழ்த்திசைக்க

நங்கை திருக்கழுத்தில்

நம்பி அவன் நாண்பூட்ட

கட்டியவன் கட்டழகைக்

கடைக்கண்கள் அளவெடுக்க

மெட்டியவன் பூட்டி விட

மெல்லியலாள் முகம் சிவக்க

இவள் பாதியிவன் பாதி

என்றிணைந்திட்ட மணவாழ்வில்

இல்லறத்தின் இலக்கணமாய் 

இரு மனமும் வாழியவே!

திருமணத்தின் இன்பங்கள் 

திகட்டாது தொடர்ந்து வர ஓருயிராய்

ஆருயிராய் மணமக்கள்  வாழியவே!

என மணமக்களை வாழ்த்த

அன்புடன் அழைக்கின்றோம்.




கூரைப் பட்டுத்தி குங்குமம் மணம் வீச

வாழைப்பந்தலில் வாத்தியங்கள் முழங்க

காலை கதிரவன் கண் சிமிட்ட

உற்றவர் உறவினர்களுடன்

முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழ்த்த

கரம் பிடிக்கும் மணமக்களை

ஆலமரத்தின் ஆணிவேராய் அன்பில் ஊன்றி

பல்லாண்டு வாழ்க வளமுடன் என்று

வாழ்த்த வருகை தரும் உங்களின்

வருகையை எதிர்நோக்கும்

இதய நட்புக்களும் இணைபிரியா சொந்தங்களும்


Pls Support our Blog. 

You Want Any Cdr. File and Psd File Comment follow.


நன்றி, தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

தமிழ் கடவுள் முருகன் PSD FILE

Tamil Invitation Cdr. File free Download