திருமண அழைப்பு கவிதைகள் - 1 ஓரடி கற்பைக் காக்க, ஈரடி கணவர் காக்க சீரடி மூன்றாம் பாதம் சேர்ந்தோர் குலத்தை காக்க நாலடி அச்சம், நாணம், மடம், பறிர்ப்பு எனும் நால்வகைப் பண்புகளைக் காக்க, ஐந்தடி புலன்கள் ஐந்தை அடக்கியே வாழவைக் காக்க ஆறடி கலைகளாறும் கணவர்கே அன்பில் ஊட்ட ஏழடி உலகில் ஏழும், அன்புடன் கணவரோடு இணைந்து வாழ! நன்னாள் பார்த்து பந்தர்கால் நட்டு அத்தைமார் நலுங்கு வைத்து உறவினர்கள் வாழ்த்துச் சொல்ல நண்பர்கள் கேலி செய்ய ஆடை ஆபரணங்கள் ஜொலி ஜொலிக்க கோலமலர்கள் வீட்டை அலங்கரிக்க தென்னாட்டுச் சமையல் கமகமக்க மேளதாளங்கள் மங்களம் முழங்க மணமக்கள் கண்களால் பேச அதை கண்டு ரசிக்க எங்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு வாருங்கள் ! வந்து மணமக்களை வாழ்த்துங்கள் !! அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து அக்கினி சாட்சியாக இல்லற வாசலில் நல்லறக் கோலமிடப் புறப்படும் எங்களைப் பெற்று வளர்த்து பேணிக் காத்த, அன்பு தெய்வங்களாம் அன்னை தந்தைக்கும் பாசப்பிணைப்போடு பண்புதனை ஊட்டிய உடன்பிறப்புக்களுக்கும் கல்வி கண்களை திறந்த குரு அவர்களுக்கும் வாழ்வுப் பாதையில் வளமோடு வாழவும் உற்ற காலத்தில் உள்ளன்போடு உதவிய